எண்ம அமைப்பு
வெளிக்கூட்டில் (Orbit) எட்டு எலக்ட்ரான்கள் இருப்பதை எண்ம
அமைப்பு என்கிறோம். இந்த அமைப்பு நிலையானது. இது
முழுமையாக நிரம்பிய எலக்ட்ரான் ஆற்றல் மட்டத்தைக்
குறிக்கிறது. மந்த வாயுக்கள் (innert gases) எண்ம அமைப்பைக் கொண்டுள்ளன.
எண்ம விதி
மந்த வாயுக்களைத் தவிர இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுக்கும் குறைவாக உள்ள மற்ற தனிமங்கள்
இந்த நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற முயல்கின்றன.
தனிமங்கள் எண்ம அமைப்பைப் பெறும் இந்தத் தன்மையே
எண்ம விதி ஆகும். அணுக்களுக்கு இடையே ஏற்படும் அனைத்து வேதிப்பிணைப்புகளுக்கும் இது பொருந்தும்.


No comments:
Post a Comment